கல்யாண மண்டபம் கட்டும் பணியை கைவிடக்கோரி கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி கருமண்டபம் குணமளிக்கும் மாதா ஆலயம் அருகே கல்யாண மண்டபம் கட்டும் பணியை கைவிடக்கோரி கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி,
திருச்சி கருமண்டபத்தில் குணமளிக்கும் மாதா ஆலயம் உள்ளது. இதன் அருகில் மெட்ரிக் பள்ளி, அருள் கன்னியர் இல்லம் ஆகியவை உள்ளன. இவற்றின் அருகில் ஒரு கல்யாண மண்டபம் கட்ட முடிவு செய்து உள்ளனர். இதை கைவிடக் கோரி ஆலய பங்கு மக்கள், கிறிஸ்தவர்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறும் போது, புனித பவுல் குருமடத்தின் சார்பில் குணமளிக்கும் மாதா ஆலயம் அருகே புதிதாக கல்யாண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் மண்டபம் கட்டினால் பங்கு மக்களின் இறை வழிபாட்டிற்கும், பள்ளி குழந்தைகளின் கல்விக்கும் பாதிப்பு ஏற்படும். அதே போன்று அங்கு வசித்து வரும் அருள் கன்னியர்களின் பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிக்கும். எனவே இத் திட்டத்தை கைவிடக்கோரி கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
ஆனால் எங்கள் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர். எனவே கல்யாண மண்டபம் கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கோரிக்கை அடங்கிய மனுக்களை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங் களை எழுப்பினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மறியல் போர ாட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த் தை நடத்தினர். அதன் பின்னர் மறியல் போர ாட்டத்தை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நேற்று கலெக்டர் அலுவலகம் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story