மகதாயி நதிநீர் பிரச்சினையில் ராகுல்காந்தி மவுனமாக இருப்பது ஏன்? சித்தராமையாவுக்கு, எடியூரப்பா கேள்வி
மகதாயி நதிநீர் பிரச்சினையில் ராகுல்காந்தி மவுனமாக இருப்பது ஏன்? என்று முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எடியூரப்பா கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு,

பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நேற்று பீதரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சோனியா காந்தி தீவைத்தார்
மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க பா.ஜனதா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தேசிய தலைவர் அமித்ஷா உறுதியாக தெரிவித்துள்ளார். வடகர்நாடக மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நானே கோவா முதல்-மந்திரியை சந்தித்து பேசுவேன். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மகதாயி பிரச்சினையில் தீர்வு காண்பதை யாராலும் தடுக்க முடியாது.
மகதாயி நதிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கு காங்கிரஸ் கட்சியே முழு காரணம். மகதாயி பிரச்சினைக்கு சோனியா காந்தி தான் தீவைத்தார். சோனியா காந்தியால் தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மகதாயி நடுவர் மன்றமும் அடைக்கப்பட்டது. தற்போது மகதாயி பிரச்சினையை திசை திருப்ப பா.ஜனதா மீது காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
மவுனமாக இருப்பது ஏன்?
மகதாயி பிரச்சினையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தனது கருத்தை தெரிவித்து உள்ளதுடன், அதற்கு தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார். கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, இதுவரை மகதாயி பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் பொய் குற்றச்சாட்டுகளை மட்டுமே ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மகதாயி நதிநீர் பிரச்சினையில் ராகுல்காந்தி மவுனமாக இருப்பது ஏன்?. அதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையா மாநில மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story