பூரண மதுவிலக்கு நிலையை அடைய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்


பூரண மதுவிலக்கு நிலையை அடைய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 March 2018 3:45 AM IST (Updated: 28 Feb 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

பூரண மதுவிலக்க நிலையை அடைய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

தமிழ்நாட்டில் படிப்படியாக பூரண மதுவிலக்கு என்ற நிலையை அடையும், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்அடிப்படையில் பூரண மதுவிலக்கு நிலையை அடைய ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறையின் சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத் தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசார கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டியதுடன் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த கலை குழுவினர் மது, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட் களை உட்கொள்வதனால் தனிமனிதனுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படும் தீமைகள் குறித்து நாட்டுப்புறப்பாடல், கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளின் மூலமாக பொதுமக்களுக்கு எளிமையாக புரிந்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்த குழுவினர் மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் வாயிலாக மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், கலால் உதவி ஆணையர் அமிர்தலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தாசில்தார்கள் சண்முகசுந்தரம், தர்மர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story