ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
முதுகுளத்தூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாடு முதுகுளத்தூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி.ராதா, ரமணி,பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயலாளர் முத்தரசன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பருவமழை பொய்த்துப்போனதால் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும், அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும், வரும் கல்வி யாண்டில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும்.
கடலாடி தாலுகாவில் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும், ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளராக வக்கீல் முருகபூபதி தேர்வு செய்யப்பட்டார். முடிவில் ஜெயசீலன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story