ஆத்தூர் சட்டசேவை முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட முதன்மை நீதிபதி சாருஹாசினி வழங்கினார்
ஆத்தூரில் நடந்த சட்டசேவை முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை நீதிபதி சாருஹாசினி வழங்கினார்.
ஆறுமுகநேரி,

சட்டசேவை முகாம்
ஆத்தூர் தனியார் மண்டபத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, திருச்செந்தூர் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் அரசு துறைகள் சார்பில், புதிய வடிவிலான சட்டசேவை முகாம் நடந்தது. மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் வரவேற்று பேசினார்.
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாருஹாசினி தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் தொழிலாளர் நலவாரியம் சார்பில், 410 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விபத்துகளில் இறந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை, முதியோர்களுக்கு உதவித்தொகை, வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு நவீன வேளாண் கருவிகள், தோட்டக்கலைத்துறை சார்பில் நவீன விதைகள், மருந்துகள் வழங்கப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், திருச்செந்தூர் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவாஜி செல்லையா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தங்கவேலு, கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் கணபதி, திருச்செந்தூர் தாசில்தார் அழகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சேகர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் செல்வி, கிராம உதயம் இயக்குனர் சுந்தரேசன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். அரசு துறைகளின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story