வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாநில அளவில் 3 நாட்கள் முதல்-அமைச்சர் கோப்பைக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 256 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 1 லட்சமும், 2-ம் பரிசு ரூ. 75 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
முதல்பரிசாக சென்னை பெண்கள் அணிக்கு (நான்கு வீராங்கனைகள்) ரூ. 4 லட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயங்களும், 2-ம் பரிசாக ஈரோடு பெண்கள் அணிக்கு ரூ. 3 லட்சத்திற்கான கா சோலை மற்றும் கேடயங்களும், 3-ம் பரிசாக காஞ்சீபுரம் பெண்கள் அணிக்கு ரூ. 2 லட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயங்களையும் கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
சென்னையை சேர்ந்த ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ. 4 லட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயமும், காஞ்சீபுரம் அணிக்கு 2-ம் பரிசாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயமும், மதுரை அணிக்கு 3-ம் பரிசாக ரூ.2 லட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயம் என மொத்தம் ரூ. 18 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும் கேடயங்களை கலெக்டர் கதிரவன் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்் நலன் அலுவலர் சிவரஞ்சன் வரவேற்று பேசினார். சென்னை மண்டல முதுநிலை மேலாளர் ராஜமகேந்திரன் முன்னிலை வகித்தார். முடிவில் கால்பந்து பயிற்றுனர் அப்துல்லாஷா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story