இன்று, பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது: நெல்லை மாவட்டத்தில் 37,963 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்
இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் பிளஸ்-2 தேர்வை நெல்லை மாவட்டத்தில் 37 ஆயிரத்து 963 பேர் எழுதுகிறார்கள்.
நெல்லை,

பிளஸ்-2 தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வு எழுத 123 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 518 மாணவ-மாணவிகளும், தென்காசி கல்வி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 521 மாணவ-மாணவிகளும், நெல்லை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 924 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதுகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 37 ஆயிரத்து 963 பேர் எழுதுகிறார்கள். இதில் 16 ஆயிரத்து 366 மாணவர்கள் ஆவார்கள். 21 ஆயிரத்து 597 மாணவிகள் ஆவார்கள். தேர்வை கண்காணிக்க 8 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வினாத்தாள்களை பாதுகாப்பாக எப்படி தேர்வு அறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். எப்படி கல்வி மாவட்டம் வாரியாக பிரித்து கொடுக்க வேண்டும் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) சின்னத்துரை, சேரன்மாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயராஜ், தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் ரமாபாய், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story