பத்ரகாளியம்மன் கோவில் மாசிமக தேரோட்டம்
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசிமக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேச்சேரி,
மேச்சேரியில் மிகப்பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மாசிமக தேர்்திருவிழா பத்ரகாளியம்மன் கோவிலின் தாய்வீடான பொங்கபாலியிலிருந்து சக்திஅழைத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து தொடங்கி விநாயகர் தேர், சின்னத்தேர் கிழக்குகோபுரம், சந்தைப்பேட்டை, கிராமச்சாவடி, மேற்கு கோபுரம் வழியாக கோவிலை அடைந்தது.
இன்று (வியாழக்கிழமை) விநாயகர் தேரும், பெரிய தேரோட்டமும் நடக்கிறது. கோவிலில் இருந்து தொடங்கி கிழக்குகோபுரம், சந்தைப்பேட்டை வழியாக மேற்கு ரதவீதி கிராமசாவடி அருகில் நிலை சேரும். நாளை (வெள்ளிக்கிழமை)் கூட்டத்தாள் பெரியதேர் கோவிலில் நிலைஅடைதலும் நடைபெறுகிறது.
3-ந்தேதி (சனி்க்கிழமை) இரவு சத்தாபரணமும், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பொங்கப்பாலியிலிருந்து அம்மன் திருவீதி உலாவும், 4-ந்தேதி மஞ்சள் நீராட்டமும் நடைபெற உள்ளது. விழாவில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் பரம்பரை கட்டளைதாரர்கள், இறையருள் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story