காரைக்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல பாதையை தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே உள்ள புதிய அகல ரெயில்பாதையை தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். இன்று வெள்ளோட்டம் நடக்கிறது.
அறந்தாங்கி,
காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைபூண்டி இடையே 187 கிலோ மீட்டர் தூரமுள்ள மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற ரூ.1700 நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2012-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ. தூரமுள்ள மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதை பணிகளை தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் காரைக்குடியில் இருந்து ஆய்வை தொடங்கினார். தொடர்ந்து நேற்று காலை அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் இருந்து டிராலியில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி சுதாகரராவ், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி, திருச்சி முதுநிலை கோட்ட இணை மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வு குறித்து தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை ரூ.700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் தண்டவாளத்தின் உறுதி தன்மை, பாலங்களின் உறுதித்தன்மை போன்றவை ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டால், நாங்கள் தெற்கு ரெயில்வேக்கு இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்கலாம் என சான்று அளிப்போம். அதைத் தொடர்ந்து காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே ரெயில் போக்குவரத்தை எப்போது தொடங்குவது என ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்
தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு இன்று (வியாழக்கிழமை) மாலையுடன் பட்டுக்கோட்டையில் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே உள்ள புதிய அகல ரெயில் பாதையில் ரெயில் வெள்ளோட்டம் விடப்படுகிறது.

Related Tags :
Next Story