சித்தரேவில் அரசு நெல் கொள்முதல் நிலையம்
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.
பட்டிவீரன்பட்டி
ஆத்தூர் தாலுகாவில் உள்ள சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி, சிங்காரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். விவசாயத்துறை அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் குறைந்த கால வித்துகளை சாகுபடி செய்தனர். தற்போது அந்த பகுதிகளில் நெல் விளைச்சல் அடைந்துள்ளது.
இதையொட்டி அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை சித்தையன்கோட்டையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். இதுதவிர சில வியாபாரிகளும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வந்தனர்.
சித்தையன்கோட்டையில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்வதால் அதிக செலவு ஏற்படுகிறது. இதுதவிர வீண் அலைச்சலும் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் கூறினர். இதுதவிர இடைத்தரகர்களின் குறுக்கீட்டால் போதுமான லாபம் கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு ஆகும்.
எனவே விவசாயிகளின் நலன்கருதி சித்தரேவில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சித்தரேவில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சித்தரேவு, விளாம்பட்டி, ஆயக்குடி, கலையம்புத்தூர், நரிக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக சித்தரேவு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நேரடி நெல் கொள்முதல் நிலையம் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்யலாம். கொள்முதல் செய்யப்படும் நெல்லுக் கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 3 நாட்களில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story