மோட்டார் சைக்கிளில் முந்திச் செல்வதில் மோதல்: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; டிரைவர் காயம்
மோட்டார் சைக்கிளில் முந்திச் செல்வதில் ஏற்பட்ட மோதலில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் டிரைவர் காயம் அடைந்தார். தப்பியோடிய வாலிபரை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை,
சென்னையை அடுத்த அம்பத்தூரில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு நேற்று காலை 9 மணியளவில் அரசு மாநகர பஸ் (தடம் எண் 40) ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால், பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சில பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.
ஐ.சி.எப். சிக்னல் அருகே நியூ ஆவடி ரோட்டில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர்கள் 2 பேர் பஸ்சை முந்திச் செல்ல முயன்றனர். ஆனால், வழி கிடைக்காததால் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ்சை ஓட்டிய டிரைவரும் அவர்களை சத்தம் போட்டதால், சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர்கள் 2 பேரும் சாலையோரம் கிடந்த கற்களை தூக்கி பஸ் கண்ணாடி மீது எறிந்தனர்.
இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து விழுந்தது. அதில் இருந்து தெறித்த கண்ணாடி துண்டுகள் டிரைவர் மீது விழுந்து, அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. தப்பியோட முயன்ற வாலிபர்களை பஸ்சில் இருந்த பயணிகளும், சாலையோரம் நடந்து சென்ற பொதுமக்களும் துரத்திச் சென்றனர்.
பொதுமக்கள் துரத்திச் சென்ற வாலிபர்களில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி சென்றுவிட்டார். பிடிபட்ட வாலிபரை ஐ.சி.எப். காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர், வில்லிவாக்கம் கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்த கிஷோர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அவரது நண்பரை தேடிவருகின்றனர்.
காயம் அடைந்த டிரைவரின் பெயர் கத்திமுத்து (வயது 50). திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர். பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவம் நேற்று நியூ ஆவடி சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Related Tags :
Next Story