தாம்பரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி


தாம்பரம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 1 March 2018 2:45 AM IST (Updated: 1 March 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே, முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, நாகல்கேணி, திருநகர், சிவசங்கரன் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 33). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று அதிகாலையில் வெற்றிச்செல்வன், வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், அவருக்கு முன்னால் சென்னை துறைமுகத்தில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த வெற்றிச்செல்வன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான வெற்றிச்செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா, வீராணம் பொன்னம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (27) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story