நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை: பாதியில் நிற்கும் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப்பணிகள்
நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பாதியில் நிற்கும் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆலந்தூர்,
சென்னை மக்களின் தவிர்க்க முடியாத போக்குவரத்து சாதனமாக உள்ளது மின்சார ரெயில்கள். சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் முக்கியமான இடங்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்து பொதுமக்களுக்கு கைகொடுத்து வருகிறது.
இதன்காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரிக்கு பறக்கும் ரெயில் திட்டம் முடிக்கப்பட்டு கடந்த 2007-ம் ஆண்டு முதல் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
வேளச்சேரி-பரங்கிமலை
பின்னர் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை ரெயில் நிலையம் வரை புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வானுவம்பேட்டை ஆகிய ரெயில்நிலையங்களுடன் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரெயில் திட்டம் அமைக்க ரூ.1,170 கோடி செலவில் திட்டமிடப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வானுவம்பேட்டை வரை பணிகள் நடந்து வருகின்றன. ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தை இணைக்க தில்லை கங்காநகரில் தூண்கள் அமைக்கப்பட்டன. தில்லைகங்காநகரில் இருந்து பரங்கிமலை வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே பாலங்கள் அமைக்க அங்கிருந்த குடியிருப்புகளை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு அதில் 25 குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு ஈட்டுத்தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே மற்றவர்கள் அதிக தொகை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கிடப்பில் போடப்பட்ட பணிகள்
வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதனால் கடந்த 2012-ம் ஆண்டே முடிக்கப்பட வேண்டிய பறக்கும் ரெயில் திட்டப்பணிகள் ஈட்டுத்தொகை பிரச்சினையால் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு உள்கட்டமைப்பு பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நிலத்தின் மதிப்பில் 2 மடங்கு தொகையுடன் 75 சதவீதம் சேர்த்து வழங்க உத்தரவிட்டு உள்ளதாகவும், அவற்றை வழங்கினால் தங்களது குடியிருப்புகளை வழங்க தயாராக உள்ளதாகவும் வழக்கு தொடர்ந்த குடியிருப்பு உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் கேட்ட தொகையை வழங்கினால், ஏற்கனவே ஈட்டுத்தொகை பெற்றவர்கள் இதேபோல் அதிக தொகை கேட்க நேரிடும் என ரெயில்வே நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
விரைந்து முடியுங்கள்
சென்னையில் மெட்ரோ ரெயில் கட்டணம், பஸ் கட்டணம் ஆகியவை அதிகமாக உள்ளது. கட்டண கொள்ளையால் ஷேர் ஆட்டோக்களில் ஏறுவதற்கு மக்கள் பயப்படுகிறார்கள். கிடப்பில் போடப்பட்டுள்ள வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டத்தை விரைவாக முடித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே குடியிருப்பாளர்களுக்கு உரிய தொகையை வழங்கி, கிடப்பில் போடப்பட்டுள்ள வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story