காப்பகத்தில் மாணவனை தாக்கி காயப்படுத்திய வார்டன் கைது


காப்பகத்தில் மாணவனை தாக்கி காயப்படுத்திய வார்டன் கைது
x
தினத்தந்தி 1 March 2018 2:45 AM IST (Updated: 1 March 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் காப்பகத்தில் மாணவனை தாக்கி காயப்படுத்திய வார்டன் கைது செய்யப்பட்டார்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த சில மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் இந்த காப்பகத்தில் தங்கியிருந்தான். காப்பகத்தில் உள்ள உண்டியல் காணிக்கை தொகையை அந்த மாணவன் திருடியதாக கூறி, காப்பக துணை வார்டன் ராபர்ட்(வயது 21) என்பவர் மாணவனை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவனது பெற்றோர் அங்கு சென்று மாணவனை மீட்டனர்.

இது குறித்து மாணவனின் தந்தை மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மாணவனை தாக்கியதாக ராபர்ட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story