பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் நிதி நிலைக்குழு தலைவர் தாக்கல் செய்தார்
பெங்களூரு மாநகராட்சிக்கு 2018-19-ம் ஆண்டிற்கு ரூ.9,325 கோடியில் நிதி நிலைக்குழு தலைவர் மகாதேவ் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சிக்கு 2018-19-ம் ஆண்டிற்கு ரூ.9,325 கோடியில் நிதி நிலைக்குழு தலைவர் மகாதேவ் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் 7 இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்தங்கள், ஏர்ஆம்புலன்ஸ் சேவைக் காக 8 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளங்கள், கழிவறை, குடிநீர் மற்றும் வைபை வசதிகளுடன் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு மாநகராட்சியை காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து கைப்பற்றியுள்ளது.
மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
மாநகராட்சி மேயராக காங்கிரசை சேர்ந்த சம்பத்ராஜும், துணை மேயராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பத்மாவதியும் உள்ளனர். மாநகராட்சியின் நிதி நிலைக்குழு தலைவராக மகாதேவ் இருந்து வருகிறார். இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சியின் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று மாநகராட்சி மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நிலைக்குழு தலைவராக உள்ள மகாதேவ், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.9,325 கோடியே 53 லட்சம் ஆகும்.
வருவாய் ஆதாரமாக ரூ.6,207 கோடியே 14 லட்சமும், முதலீடுகள் மூலமாக ரூ.3,115 கோடியே 34 லட்சமும் கிடைத்துள்ளது. தொடக்க இருப்பாக ரூ.4.39 கோடி இருந்தது. இறுதி இருப்பு ரூ.1.34 கோடியாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால் வரி ஏய்ப்பு செய்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏரிகளின் பாதுகாப்பு, திருநங்கைகளுக்கு சிறப்பு சலுகைகள், துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச மதிய உணவு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தொழிலாளர்களுக்கு இலவச மதிய உணவு
* பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ‘பயோ மெட்ரிக்’ முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்பத்தினர் ஓய்வூதியதாரர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
* பெங்களூரு மாநகராட்சி அலுவலகம், முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிறுத்தங்கள் உள்பட 400 இடங்களில் இலவச ‘வை-பை’ வசதி அறிமுகப்படுத்தப்படும்.
* பெங்களூரு மாநகராட்சியில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இந்திரா மலிவு உணவகத்தின் மூலம் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
* மாநகராட்சிக்கு சொந்தமான 19 லட்சம் சொத்துகள் அடையாளம் காணப்பட்டு, அதன்மூலம் மாநகராட்சிக்கு வருமானம் பெறப்பட்டு வருகிறது. சொத்து வரி மூலம் இந்த ஆண்டு மாநகராட்சிக்கு ரூ.3,317 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* மாநகராட்சி பகுதிகளில் தனியார் விளம்பரங்கள் வைப்பதற்கு கடிவாளம் போடப்படும். தனியார் விளம்பரங்கள் மாநகராட்சி பகுதிகளில் இடம் பிடிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். விதிமுறைகளை மீறி வைக்கப்படும் விளம்பர பேனர்கள் அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
* விளம்பரங்கள் மூலம் 2018-2019-ம் ஆண்டில் மாநகராட்சிக்கு ரூ.75 கோடியே 25 லட்சம் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடு கட்ட ரூ.5 லட்சம்
* மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்கள் அகற்றப்படும். மாநகராட்சி பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்கள் மூலமாக ரூ.50 கோடி வருமானம் கிடைக்க உள்ளது.
* மாநகராட்சி பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிப்பது, அதற்கான சான்றிதழ்கள் அளிப்பது, அபராதம் விதிப்பது, சாலைகளில் குழி தோண்டுவதற்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவை மூலம் ரூ.768 கோடி வருமானம் கிடைக்கும்.
* பெங்களூரு மாநகராட்சிக்கு 2018-2019-ம் ஆண்டில் மத்திய அரசு மூலம் ரூ.306 கோடியே 87 லட்சமும், மாநில அரசு மூலம் ரூ.3,343 கோடியே 42 லட்சமும் கிடைக்க உள்ளது.
* பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் வீடுகள் கட்டி கொள்ள வழங்கப்பட்ட நிதி ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். இதற்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏர் ஆம்புலன்ஸ்
* பெண்கள் நலத்துறை மூலம், ஏழை, எளிய பெண்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு வார்டுக்கும் தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் உள்ள 100 முதியவர்களுக்கு ஊன்றுகோல்(வாக்கிங் ஸ்டிக்) வழங்கப்படும். மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும்.
* பெங்களூரு மாநகராட்சி பகுதியில் குடிநீர், கழிவறை மற்றும் வைபை வசதிகளுடன் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்படும்.
* ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்காக 8 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
* நகரில் 7 இடங்களில் பலஅடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும்.
திருநங்கைகளுக்கு பஸ் பாஸ்
* திருநங்கைகள் நலவாரியத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் திருநங்கைகள் இலகுரக வாகனங்களை ஓட்டி பழகுவதற்காக இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு கல்வி மற்றும் சுய வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
* திருநங்கைகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
* மாநகராட்சி பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஒருமுறை இலவசமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
* மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் 150 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், மாநகராட்சி கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வில் முதல் 100 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரமும் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
* 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் முதல் பெண் குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ‘பிங் பேபி‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.
* தெருநாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* பெங்களூருவை உருவாக்கிய கெம்பேகவுடாவின் ஜெயந்தியை கொண்டாட ஒவ்வொரு வார்டுக்கும் தலா ரூ.1½ லட்சம் நிதி ஒதுக்கப் படும்.
* பெங்களூரு காந்திநகர், எம்.ஜி.ரோடு, டிஸ்பென்சரி ரோடு, சிவாஜிநகர் ரசல் மார்க்கெட்டில் தானியங்கி வாகன நிறுத்தங்கள் அமைக்கப் படும்.
ஏரிகளை பராமரிக்க ரூ.10 கோடி
* மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மருத்துவ நிதி தலா ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* மாநகராட்சி நிர்வாகம் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில் கவுன்சிலர்கள் அனைவருக்கும் ‘டேப்லெட்’ வழங்கப்படுகிறது. மேலும் மாநகராட்சி கவுன்சிலர்கள் பெயரில் இ-மெயில் முகவரி தொடங்கப்படும்.
* மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், பிற அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
* சாலை விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
* கழிவுநீர், குப்பைகளை ஏரிகளில் கலக்கும்படி செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஏரிகளை பராமரிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
* பெங்களூரு நகரில் சாலை வசதிகளை மேற்கொள்ள ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
* 150 கிலோ மீட்டர் சாலைகள் ‘ஒயிட் டாப்பிங்’ செய்யப்படும்.
* பாதசாரிகள் வசதிக்காக 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story