கர்நாடகத்தில் இன்று பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு இறுதி தேர்வு தொடக்கம் 6.90 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
கர்நாடகத்தில் இன்று பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு இறுதி தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 6.90 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
பெங்களூரு,

6.90 லட்சம் மாணவ-மாணவிகள்
கர்நாடகத்தில் 2-ம் ஆண்டு பி.யூ. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான இறுதி தேர்வு இன்று(வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. இன்று பொருளாதாரம் மற்றும் இயற்பியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வை மாநிலம் முழுவதும் மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரத்து 152 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 393 பேரும், கலை பாடப்பிரிவில் 2 லட்சத்து ஒரு ஆயிரத்து 278 பேரும், வணிக பாடப்பிரிவில் 2 லட்சத்துக்கு 56 ஆயிரத்து 479 பேரும் தேர்வு எழுத இருக்கிறார்கள். இதில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 346 பேர் மறுத்தேர்வர்கள் ஆவார்கள். இதற்காக 1,004 தேர்வு மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
பறக்கும் படைகள் அமைப்பு
தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக மொத்தம் 858 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ‘பயோமெட்ரிக்‘ முறையில் தங்களின் வருகையை பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கருவூலங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதன்மூலம் வாகனங்களின் நடமாட்டம் முறையாக கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்குள் செல்வதற்காக கே.எஸ்.ஆர்.டி.சி. அரசு பஸ்களில் ‘ஹால் டிக்கெட்டை’ காண்பித்து இலவசமாக அவர்கள் பயணிக்கும் வசதியும் உள்ளது.

Related Tags :
Next Story