நடிகர் பிரகாஷ் ராஜின் மதிப்பு வெறும் ஒரு ரூபாய் தானா? பிரதாப் சிம்ஹா எம்.பி. கிண்டல்
தன்னைப்பற்றி அவதூறான கருத்தை பதிவிட்டதால் பிரதாப் சிம்ஹா எம்.பி.யிடம் இருந்து மானநஷ்ட ஈடாக ஒரு ரூபாய் கேட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மைசூரு,
தன்னைப்பற்றி அவதூறான கருத்தை பதிவிட்டதால் பிரதாப் சிம்ஹா எம்.பி.யிடம் இருந்து மானநஷ்ட ஈடாக ஒரு ரூபாய் கேட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக பேட்டி அளித்த பிரதாப் சிம்ஹா எம்.பி. நடிகர் பிரகாஷ் ராஜின் மதிப்பு வெறும் ஒரு ரூபாய் தானா? என்று கூறினார்.
அவதூறான கருத்து
மைசூரு-குடகு மாவட்டம் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரதாப் சிம்ஹா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து டுவிட்டரில் அவதூறான கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், உடனடியாக அதற்கு விளக்கம் அளிக்கும்படி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் பிரதாப் சிம்ஹா விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் மைசூரு கோர்ட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனக்கு, பிரதாப் சிம்ஹா மான நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது நடிகர் பிரகாஷ் ராஜ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மானநஷ்ட வழக்கு
இந்த நிலையில் நேற்று மைசூருவில் பிரதாப் சிம்ஹா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் பிரகாஷ் ராஜ் என் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவர் என்னிடம்(பிரதாப் சிம்ஹா) மானநஷ்ட ஈடாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார். அவருடைய மதிப்பு வெறும் ஒரு ரூபாய் தானா?.
அவருடைய விலை மதிப்பு வெறும் ஒரு ரூபாய் தான் என்று அவரே ஒப்புக்கொண்டார். கோர்ட்டில் மட்டுமல்ல, மாநிலத்திலும் அவருடைய விலை மதிப்பு வெறும் ஒரு ரூபாய் தான்.
பெயர் குழப்பம் ஏற்பட்டது
பிரகாஷ் ராஜை ஒருவகையில் பாராட்டுகிறேன். பிரகாஷ் ராஜ் நடிப்பு மற்றும் நிஜ வாழ்க்கை என்று 2 வாழ்க்கைகளை வாழ்ந்து கொண்டிருக்கிறார். சமுதாயத்தில் அவரின் விலை மதிப்பு வெறும் 3 காசு தான். அவர் எனக்கு அனுப்பியிருந்த நோட்டீஸ், நான் வீட்டில் இல்லாத போது வந்துள்ளது. அதில் புதுடெல்லியில் உள்ள ஜூபிலி இல்ஸ் பிரகாஷ் ராஜ் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதனால் எனக்கு பெயர் குழப்பம் ஏற்பட்டது. அதன்காரணமாக அந்த நோட்டீசை யார் அனுப்பி இருந்தார்கள் என்று என்னால் கண்டறிய முடியவில்லை. அதனாலேயே நான் அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கவில்லை. இனிமேல் நடிகர் பிரகாஷ் ராஜ் எப்போது எனக்கு நோட்டீஸ் அனுப்பினாலும் அவருடைய உண்மையான பெயரை குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நான் பதிவு செய்யவில்லை
இவர் ஒரு இடத்தில் பிரகாஷ் ராஜ் என்றும், மற்றொரு இடத்தில் பிரகாஷ் ராய் என்றும் தனது பெயரை குறிப்பிடுகிறார். அதனால் அவருடைய உண்மையான பெயரை தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். பிரகாஷ் ராஜுக்கு எதிராக நான் டுவிட்டரில் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.
எனது செல்போன் மூலம் நான் டுவிட்டரை பார்த்தபோது, தபஷ்வீ என்பவர் டுவிட்டரில் எனக்கு அந்த கருத்தை அனுப்பி இருந்தார். நான் அதை மற்றவர்களுக்கு பகிர்ந்தேன். அவ்வளவுதான்.
இவ்வாறு பிரதாப் சிம்ஹா எம்.பி. கூறினார்.

Related Tags :
Next Story