மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
மும்பை,
மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
இன்று தேர்வு தொடங்குகிறது
மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில் இன்று(வியாழக்கிழமை) எஸ்.எஸ்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்குகிறது. இந்த தேர்வினை மும்பை, புனே உள்பட 9 கல்வி மண்டலங்களை சேர்ந்த சுமார் 17½ லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மும்பையில் மட்டும் 3 லட்சத்து 83 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மாநிலத்திலேயே மும்பை மண்டலத்தில் தான் அதிக மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மும்பை கல்வி மண்டலம் மும்பை, தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும்.
தாமதமாக வருபவர்களுக்கு அனுமதியில்லை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலை, மதியம் என 2 வேளைகளும் நடைபெறுகிறது. இன்று காலை இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழி பாடத்தேர்வு நடக்கிறது. மதியம் பிரஞ்சு தேர்வு நடைபெறுகிறது. காலை தேர்வுகள் 11 மணி முதல் 2 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறும்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு போல, 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கல்வி வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Tags :
Next Story