நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் போலீஸ் விசாரணை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ஸ்ரீதேவி மரணம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மும்பை,

ஸ்ரீதேவி மரணம்
நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ந்தேதி துபாயில் மரணம் அடைந்தார். முதலில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் குளியலறை தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கை துபாய் போலீசார் முடித்து வைத்தனர். இதையடுத்து அவரது உடல் நேற்றுமுன்தினம் இரவு மும்பை கொண்டு வரப்பட்டது. நேற்று மும்பையில் இறுதிச்சடங்கு நடந்தது.
இந்தநிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மரண வழக்கை துபாய் போலீசார் முடித்து வைத்தாலும், அதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதே நேரத்தில் இது தேவையற்றது என்ற கருத்தும் எழுந்து உள்ளது.
இ-மெயில்
ஸ்ரீதேவி மரணம் குறித்து மும்பை போலீசுக்கு ஜெய் ஹோ பவுண்டேசன் என்ற தொண்டு அமைப்பின் வக்கீல் அடில் காட்ரி என்பவர் மும்பை போலீஸ் கமிஷனருக்கு இ-மெயில் ஒன்று அனுப்பி உள்ளார். அதில், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து குற்ற நடைமுறையின் கீழ் முழுமையான விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார்.
இதற்கிடையே நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக மும்பை போலீஸ் விசாரணை நடத்துவது தேவையற்றது என மனித உரிமை ஆர்வலர் அபாசிங் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையாக நிகழ்ந்த ஒரு விபத்து. சிலர் ஸ்ரீதேவியின் மரணத்தையும், காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்தையும் ஒன்றுபடுத்தி பேசுகிறார்கள். ஆனால் இவ்விரு மரணங்களும் வேறுபட்டவை” என்றார்.

Related Tags :
Next Story