மிராரோட்டில், துப்பாக்கியால் சுட்டு கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி காதல் தோல்வி காரணமா? போலீஸ் விசாரணை
மிராரோட்டில் கல்லூரி மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை,

வயிற்றில் துப்பாக்கி குண்டு
பால்கர் மாவட்டம் மிராரோடு, காஷிமிரா பகுதியில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-
துப்பாக்கி குண்டு வயிற்றில் பாய்ந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவர் காந்திவிலி கிழக்கு சாம்தாநகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் கிரி(வயது21) ஆவார். இவர் காஷிமிரா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
காதல் தோல்வி?
சமீபத்தில் மாணவர் உடன்படிக்கும் மாணவியை காதலிப்பதாக தெரிவித்ததாகவும், அதை அந்த மாணவி ஏற்கவில்லை எனவும் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த ஜெயபிரகாஷ் கிரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? மாணவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மாணவர் மேல் சிகிச்சைக்காக காந்திவிலி சதாப்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story