7 மாத குழந்தையை கொன்ற தாய் கைது நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் விபரீதம்


7 மாத குழந்தையை கொன்ற தாய் கைது நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் விபரீதம்
x
தினத்தந்தி 1 March 2018 4:20 AM IST (Updated: 1 March 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் 7 மாத குழந்தையை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

புனே,

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் 7 மாத குழந்தையை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை மர்மச்சாவு

புனே, விசாபுர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஆர்யன் என்ற 7 மாத மகன் இருந்தான். ஆர்யன் கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தான். குழந்தையின் தாத்தா அவனது சாவில் மர்மம் இருப்பதாக அங்குள்ள போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது, குழந்தை ஆர்யன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

கணவருக்கு சந்தேகம்

இதையடுத்து போலீசார் அர்ஜூன் மற்றும் சுனிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சுனிதா குழந்தையை வாயைப்பொத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து சுனிதாவை போலீசார் கைது செய்தனர். இது குறித்து அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

திருமணம் முடிந்த 2 மாதத்தில் நான் கர்ப்பம் ஆனேன். எனவே எனது கணவர் எனக்கு திருமணத்திற்கு முன்பே வேறு நபருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டார். இந்தநிலையில் எனக்கு பிறந்த குழந்தையும் உறவினர் ஒருவரை போல இருந்ததால் கணவருக்கு என் மீது இருந்த சந்தேகம் அதிகமானது. எனவே குழந்தையை கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார்.

Next Story