ராமேசுவரத்தில் மீட்கப்பட்ட சிறுவனை ஐதராபாத் அனுப்ப ஏற்பாடு


ராமேசுவரத்தில் மீட்கப்பட்ட சிறுவனை ஐதராபாத் அனுப்ப ஏற்பாடு
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் தனியாக தவித்து கொண்டிருந்தபோது மீட்கப்பட்ட சிறுவனை அவனது பெற்றோரை கண்டுபிடித்து ஒப்படைக்க ஐதராபாத் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமேசுவரம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி சைல்டுலைன் அமைப்பினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ரெயில் நிலையம் பகுதியில் சிறுவன் ஒருவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் செய்வதறியாது திகைத்து கொண்டிருந்ததை கண்டனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவனை பிடித்து விசாரித்தபோது இந்தியில் பேசியுள்ளான்.

இதனால் இந்தி தெரிந்த போலீசாரை வரவழைத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அந்த சிறுவன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினார் அருகே உள்ள எக்சாலிஸ் பகுதியை சேர்ந்த சேக்பாபு என்பவரின் மகன் சேக்ஆஷிப் (வயது13) என்பது தெரிந்தது. இதன்பின்னர்அந்த சிறுவனை சைல்டுலைன் அமைப்பினர் ராமநாதபுரம் குழந்தைகள் நல குழுவில் ஒப்படைத்தனர். அதன் தலைவர் சகுந்தலாவின் விசாரணைக்கு பின்னர் சிறுவன் ராமநாதபுரத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தான். சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு தலைவர் துரைமுருகன்தலைமையிலான குழுவினர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளுக்தகவல் தெரிவித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் சிறுவன் அளித்த முகவரியில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்து அங்கிருந்து விசாரித்து பார்க்க முடிவு செய்யப்பட்டது. இதன்படிசிறுவன் சேக்ஆஷிப்பை 2 காவலர்கள், ஒரு சைல்டுலைன் உறுப்பினர் ஆகியோர் ஐதராபாத் அழைத்து செல்கின்றனர். இவர்கள் ஐதராபாத்தில் உள்ள குழந்தைகள் நல குழு தலைவர் ஸ்ரீபுப்பலா சியாமளா தேவியிடம் ஒப்படைக்க உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ராமேசுவரம் வந்த சிறுவனின் பெற்றோர் பற்றி உறுதியான விவரங்கள் தெரியாததால் சிறுவனை ஒப்படைக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்து தீவிரமாக தேடி சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.

Next Story