2 லட்சத்து 8 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட நடவடிக்கை
மாவட்டத்தில் 2 லட்சத்து 8 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த தமறாக்கியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 14-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் லதா தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் கருணாகரன் வரவேற்றார். அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கால்நடைகளை அதிக அளவு தாக்கி வந்த கால்காணை மற்றும் வாய்காணை என்ற கோமாரி நோயினால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மிகுந்த பாதிப்படைந்ததையொட்டி கால்நடைகளை பாதுகாத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் கோமாரி நோய் தடுப்பூசி மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ஆண்டிற்கு 2 முறை கால்நடைகளுக்கு தடுப்பூசி போட உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் வருகிற 23-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இதன்மூலம் மாவட்ட அளவில் 2 லட்சத்து 8 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமிற்கு கால்நடைத்துறையின் மூலம் 25 மருத்துவர் குழுவும், ஆவின் நிர்வாகம் மூலம் 7 மருத்துவர் குழுவும் என மொத்தம் 32 மருத்துவர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரை முகாம் நடைபெறும். அதன்பின்னர் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்வார்கள். எனவே ஒவ்வொரு முறையும் கால்நடைகளுக்கு கட்டாயம் கோமாரி தடுப்பூசியை போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் கோவில்ராஜா, ஏஞ்சல்னா, ஆவின் உதவி பொதுமேலாளர் ரங்கசாமி, உதவி மருத்துவர் ராஜேஷ், சிவகங்கை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story