நெல்லை அருகே பரபரப்பு: பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவனுக்கு சரமாரி கத்திக்குத்து
களக்காடு அருகே பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவனுக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது.
களக்காடு,
களக்காடு அருகே பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவனுக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக சக மாணவனை போலீசார் கைது செய்தனர்.
9-ம் வகுப்பு மாணவர்கள்
நெல்லை மாவட்டம் களக்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் ஒரு பிரிவு களக்காடு-மூங்கிலடி சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளிக்கூடத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு களக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் வகுப்பில் மாணவர் தலைவனாக உள்ளான். இதே வகுப்பில் களக்காடு அருகே உள்ள மேலப்பத்தை கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவனும் படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கூடத்தில் இறைவணக்கம் முடிந்ததும் மாணவர்கள் தங்களது வகுப்புகளுக்கு சென்று கொண்டு இருந்தனர். 9-ம் வகுப்பு மாணவர்களும் அவர்களின் வகுப்பறைகளுக்கு சென்று அமர்ந்தனர்.
கத்திக்குத்து
அப்போது, வகுப்பறையில் மேற்கண்ட 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை சக மாணவர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 15 வயது மாணவன் திடீரென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் 14 வயது மாணவனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து வகுப்பறையில் இருந்த சக மாணவ-மாணவிகள் சத்தம் போட்டனர். இதுகுறித்து உடனடியாக பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, கத்தியால் குத்திய 15 வயது மாணவன் அங்கிருந்து கத்தியுடன் தப்பி ஓடிவிட்டான். பின்னர் ஆசிரியர்கள், காயம் அடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அவன் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கூடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 14 வயது மாணவன் வகுப்பறை மாணவர் தலைவனாக இருப்பதால், 15 வயது மாணவன் மீது அடிக்கடி ஆசிரியரிடம் புகார் தெரிவித்ததாகவும், இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தப்பி ஓடிய மாணவனை களக்காடு போலீசார் கைது செய்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். களக்காட்டில் பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story