மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 467 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்


மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 467 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்
x
தினத்தந்தி 2 March 2018 4:30 AM IST (Updated: 2 March 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 27 மையங்களிலும் என மொத்தம் 66 மையங்களில் இந்த தேர்வு நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் உள்ள 102 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 257 மாணவர்களும், 6 ஆயிரத்து 343 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதே போல் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 74 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 752 மாணவர்களும், 5 ஆயிரத்து 115 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

மாவட்டம் முழுவதும் 176 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 9 மாணவர்களும், 11 ஆயிரத்து 458 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வை முன்னிட்டு 170 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு நடைபெறும் மையங் களை கண்காணித்தனர்.

கலெக்டர் ஆய்வு

ஓசூரில் தேர்வு நடைபெற்ற அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையங்களை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்றைய தமிழ் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

Next Story