முதல்-அமைச்சர் வீடு முன்பு 6-ந்தேதி காத்திருப்பு போராட்டம்
கரும்பு அரவை ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ.1,137 கோடி பாக்கி தொகையை பட்டுவாடா செய்ய வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி முதல்-அமைச்சர் வீட்டு முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர்,
தமிழ்நாட்டில் உள்ள 26 தனியார் கரும்பு ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,137 கோடி பாக்கி தர வேண்டி உள்ளது. இந்த பணத்தை பட்டுவாடா செய்யக்கோரி கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பின்னர் தமிழக அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது பாக்கி தொகையை தருவதாக ஒப்புக்கொண்ட கரும்பு ஆலை பிரதிநிதிகள் இதுவரை பாக்கி தொகையை பட்டுவாடா செய்யவில்லை. இதுதவிர 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.237 கோடி பாக்கி தரவேண்டி உள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலையில் தர வேண்டிய ரூ.1,137 கோடி பாக்கி தொகையை பட்டுவாடா செய்ய மறுக்கும் ஆலைகள் மீது அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையே தொடர்கிறது. எனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.1,137 கோடி பாக்கி தொகையை பட்டுவாடா செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சர் வீட்டு முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
முன்னதாக சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சர் வீட்டு முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்குவர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 2016-2017-ம் நிதியாண்டிற்கு 100 சதவீத இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் தமிழகத்தில் எந்த பகுதியிலும் 100 சதவீத இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே 2016-2017-ம் நிதியாண்டிற்கு வழங்கப்பட வேண்டிய முழு இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2017-2018-ம் நிதியாண்டிற்கு வறட்சி பாதிப்பு பற்றி ஆய்வு செய்து அதன்படியான இழப்பீட்டு தொகையினை விவசாயிகளுக்கு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கரும்புக்கு வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் ஆதார விலையில் இருந்து தமிழக அரசு கூடுதல் விலையை நிர்ணயம் செய்து அதன்படி சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்ய பரிந்துரை செய்யும். கடந்த 2016-ம் ஆண்டிற்கு தமிழக அரசு பரிந்துரை விலையாக டன்னுக்கு ரூ.2750 என நிர்ணயம் செய்தது. ஆனால் கடந்த ஆண்டிற்கு இதுவரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே தமிழக அரசு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் என பரிந்துரை விலை நிர்ணயம் செய்து அதன்படி சர்க்கரை ஆலை பணப்பட்டுவாடா செய்ய பரிந்துரைக்க வேண்டும்.
தமிழகத்தில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டு வருவதால் கிராமப்பகுதிகளில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மணல் திருட்டை தடுக்க மாநிலம் முழுவதும் உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன் மணல் குவாரி செயல்பாட்டிற்கு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
பேட்டியின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

Related Tags :
Next Story