பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது: 28,598 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 598 மாணவ-மாணவிகள் எழுதினர்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. செய்யாறு கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 757 மாணவர்களும், 5 ஆயிரத்து 513 மாணவிகளும் என 10 ஆயிரத்து 270 பேரும், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 932 மாணவர்களும், 9 ஆயிரத்து 414 மாணவிகளும் என 18 ஆயிரத்து 346 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 28 ஆயிரத்து 616 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 89 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று காலை 9 மணியளவில் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் தேர்வு மையத்தின் வளாகத்தில் அமர்ந்து கடைசி நிமிடம் வரை வீண் செய்யாமல் மாணவர்கள் படித்தனர். இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டனர்.
மாணவர்களை அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் வாழ்த்தினர். 10 மணியளவில் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு மையங்களை கண்காணிக்க 96 முதன்மை கண்காணிப்பாளர்களும், 97 துறை அலுவலர்களும், 1,733 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தேர்வு அறையில் ஏதேனும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனரா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் 140 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் சென்று சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொதுத் தேர்வை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரவி, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் சத்யா மற்றும் பலர் உடனிருந்தனர்.
இந்த தேர்வுக்கு பள்ளிகளில் இருந்து விண்ணப்பித்த மாணவர்கள் 18 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 28 ஆயிரத்து 698 பேர் தேர்வு எழுதினர்.
மேலும் தனித்தேர்வர்கள் 306 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 263 பேர் தேர்வு எழுதினர். 43 பேர் தேர்வு எழுதவரவில்லை.

Related Tags :
Next Story