பாளையங்கோட்டை தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
பாளையங்கோட்டையில் தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.
நெல்லை,

ரூ.10 ஆயிரம் லஞ்சம்
நெல்லை பாளையங்கோட்டை தெற்கு ஐகிரவுண்டு ரோட்டில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த சான்றிதழ் வழங்குவதற்காக அந்த அலுவலகத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை பள்ளிக்கூட ஊழியர் ஒருவரிடம் கொடுத்து சம்பந்தப்பட்ட தீயணைப்பு வீரரிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.
தப்பி ஓட்டம்
அதன்படி நேற்று மாலையில் அந்த நபர், ரசாயன பவுடர் தடவிய பணத்தை தீயணைப்பு வீரரிடம் கொடுக்க சென்றார். ஆனால் அதற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதாக தீயணைப்பு படை வீரருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தினார்கள். அந்த அலுவலகத்தில் வேறு ஏதேனும் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு முழுவதும் நீடித்தது. இந்த சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story