ஸ்டாலின் பிறந்தநாள் விழா: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. அணிவித்தார்


ஸ்டாலின் பிறந்தநாள் விழா: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. அணிவித்தார்
x
தினத்தந்தி 2 March 2018 2:45 AM IST (Updated: 2 March 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை கீதாஜீவன் எம்.எல்.ஏ. அணிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை கீதாஜீவன் எம்.எல்.ஏ. அணிவித்தார்.

ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாநகரம் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் கட்சி கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. மாலையில் பழைய பஸ் நிலையம் அருகே வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் 65 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகிலும், ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் பாலவிநாயகர் கோவில் தெருவிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 10 குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை அணிவித்தார்.

யார்-யார்?

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அம்பாசங்கர், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து திரேஸ்புரம், 1-ம் கேட் காந்தி சிலை உள்ளிட்ட பல இடங்களிலும் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Next Story