கடலோர காவல்-கப்பல்படை தேர்வுக்கு மீனவ இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடி மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு கடலோர காவல்படை, கப்பல்படை தேர்வுகளில் தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
சிறப்பு பயிற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பிளஸ்-2 அல்லது அதற்கு மேல் படித்த மீனவர், மீனவர்களுடைய வாரிசுகள், இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல்படை ஆகியவற்றில் நவிக், மாலுமி பணிகளுக்கு நடத்தப்படும் தகுதி தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடைந்து வேலைவாய்ப்பு பெற, மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் இந்த பயிற்சி 3 மாதங்கள் நடத்தப்படுகிறது. பயிற்சியின் போது பயிற்சி பெறும் மீனவ இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.
விண்ணப்பம்
இந்த பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பம் தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவ இளைஞர்கள் இந்த சிறப்பு பயிற்சியில் சேர விரும்பினால், அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிற 10-ந்தேதிக்குள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-2320458 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story