மாசி மக திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
மாசி மக திருவிழாவையொட்டி தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கரூர்,
கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா கடந்த மாதம்(பிப்ரவரி) 19-ந் தேதி தொடங்கியது. கடந்த 21-ந் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் சாமி புறப்பாடு நடந்து வருகிறது. கடந்த 27-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் கல்யாண வெங்கடரமண சாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு தேரை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கீதா எம்.எல்.ஏ. ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதனைதொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரை இழுக்கும் போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காலை 9.50 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் சாமி புறப்பாடு நடைபெற உள்ளது. விழா வருகிற 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுரேஷ், உதவி ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story