தேனீக்கள் கொட்டியதில் பக்தர் சாவு
பவானிசாகர் அருகே கோவில் திருவிழாவில் தேனீக்கள் கொட்டியதில் பக்தர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பவானிசாகர்,
கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 41). நகைப்பட்டறை தொழிலாளி. இவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தெங்குமரஹடா வனப்பகுதியில் உள்ள ஆதிகருவண்ணராயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கருப்புசாமி தனது உறவினர்களுடன் கோவில் அருகே கூடாரம் அமைத்து தங்கியிருந்தார். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் அருகில் ஒரு மரத்தில் இருந்த தேன்கூட்டினை கலைத்தனர். இதனால் கலைந்த தேனீக்கள் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் கூட்டத்தை நோக்கி பறந்து வந்தது.
அப்போது கருப்புசாமி மற்றும் அவருடைய உறவினர்களை விரட்டி விரட்டி கொட்டியது. அதனால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தேனீக்கள் கொட்டியதில் கருப்புசாமியின் முகம் வீங்கியது. மேலும் அவருடைய உறவினர்களான ரங்கநாதன் (47), தினேஷ்குமார் (44), பாலமுருகன் (38), பிரபு (55), சதீஷ் (10), மோனிசா (9), பிரனேஷ் (7) ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் கருப்புசாமி உள்பட 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கருப்புசாமி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 7 பேருக்கும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story