மாசி மக பெருவிழாவையொட்டி ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


மாசி மக பெருவிழாவையொட்டி ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

மாசி மக பெருவிழாவையொட்டி ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மக பெருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. இதைதொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. காலை 5 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையாக வாசனை திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவரை கோவிலில் இருந்து ஊர்வலமாக மகா மக குளத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் மகா மக குளத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகளில் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், சு.ஆடுதுறையில் குந்தலாம்பிகை சமேத குற்றம் பொறுத்தவர் கோவிலில் கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக பெருவிழா தொடங்கியது. இதை முன்னிட்டு ஒவ்வொரு சுவாமிகளுக்கும் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இரவு வீதி உலாவும் நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று மாசி மக பெருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் முக்கிய வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து சாமியை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வெள்ளாற்றில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வாளர் சன்னாசி, செயல் அலுவலர் ரமேஷ், கணக்கர் கிருஷ்ணமுர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story