5¼ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி
வேலூர் மாவட்டத்தில் 5¼ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான முகாமை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 40 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மூலம், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளடங்கிய 73 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்க விழா காட்பாடியை அடுத்த பெரியபுதூர் கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ராமன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் அர்த்தனாரி, துணை இயக்குனர் சாந்தகுமாரி, உதவி இயக்குனர்கள் செல்வன், மஞ்சுளா, மருத்துவர்கள் செல்வராஜ், திருமூலன், தாமசீனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தடுப்பூசி பணிகள் ஆவின் கால்நடை உதவி மருத்துவர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாம்கள் மூலம் கால்நடைகள் பயன்பெற வசதியாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதாகவும், தனியார் பால் கொள்முதல் முகவர்களுக்கும் இந்த தடுப்பூசி பணி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story