அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியர் சாவு
கூடலூரில் மின்வாரிய ஊழியர் நெஞ்சுவலியால் பரிதாபமாக இறந்தார். அவருக்கு தாமதமாக சிகிச்சை அளித்ததால் அவர் இறந்ததாக புகார் கூறி மின்வாரிய ஊழியர்கள், உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா மசினகுடி மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 46). இவரது சொந்த ஊர் குன்னூர் ஆகும். குடும்பத்துடன் மின்வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று காலை 7 மணிக்கு கிருஷ்ணமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருடன் பணியாற்றி வந்த குணசேகரன் உள்பட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணமூர்த்திக்கு சிகிச்சை அளிப்பதற்காக மசினகுடி சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கிருஷ்ணமூர்த்தி அனுமதிக்கப்பட்டார். அப்போது பணியில் உள்ள டாக்டர்கள் சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி நெஞ்சுவலியால் பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட சக மின்வாரிய ஊழியர் குணசேகரன் (45) அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக குணசேகரன் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் செய்ததால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்து விட்டார் என அவரது உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர். தகவல் அறிந்த கூடலூர், மசினகுடி மின் வாரிய ஊழியர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் புகழேந்தி ஆகியோர் விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தி உறவினர்கள், மின்வாரிய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நல்ல நிலையில் ஆஸ்பத்திரி உள்ளே நடந்து வந்த கிருஷ்ணமூர்த்தியை ½ மணி நேரம் கழித்து காலதாமதமாக சிகிச்சை அளித்ததால் உடல் நலம் பாதித்து திடீர் என இறந்து விட்டார். இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தினர்.
ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர் எந்த நேரம் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு சிகிச்சை எந்த நேரத்தில் அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும். அதனடிப்படையில் விசாரணை நடத்தப்படும். மேலும் இறந்து போன கிருஷ்ணமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னரே அவர் எப்படி இறந்தார் என தெரிவிக்க முடியும்.இவ்வாறு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தி உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே சக ஊழியர் உயிரிழந்த சம்பவத்தால் மின்வாரிய ஊழியர்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் கூடலூர் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Related Tags :
Next Story