தலித் வாலிபரை காதலித்து மணந்த மகளை கொன்று உடலை எரித்த கொடூரம் விவசாயி கைது
மைசூருவில் ஆணவக்கொலை சம்பவம் நடந்துள்ளது. தலித் வாலிபரை காதலித்து மணந்த மகளை கொன்று உடலை எரித்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மைசூரு,
மைசூருவில் ஆணவக்கொலை சம்பவம் நடந்துள்ளது. தலித் வாலிபரை காதலித்து மணந்த மகளை கொன்று உடலை எரித்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆணவக்கொலை
நாடு முழுவதும் தற்போது சாதி வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்திலும் தற்போது ஆணவக் கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அதுபோன்று கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் நடந்த ஒரு ஆணவக்கொலை சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கொள்ளனபீடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். விவசாயி. இவர் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது மகள் சுஷ்மா(வயது 20). இவருக்கும் ஆலனஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தலித் வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
தலித் வாலிபருடன் திருமணம்
இவர்களது காதலுக்கு சுஷ்மாவின் தந்தை குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீ ஏன் தலித் வாலிபரை காதலிக்கிறாய் என்று கூறி சுஷ்மாவை, அவருடைய தந்தை குமாரும், குடும்பத்தினரும் சரமாரியாக அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சுஷ்மா தனது காதலனுடன் பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த குமார், தனது மகளை கண்டித்தார். மேலும் அவரை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார். இதனால் மனமுடைந்த சுஷ்மா வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
விஷத்தை குடிக்க வைத்தனர்
தலித் வாலிபரை மணந்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த சுஷ்மாவின் பெற்றோர், உடனடியாக கிராம பஞ்சாயத்தார் மூலம் சுஷ்மாவையும், அவருடைய காதலனையும் பிரித்தார்கள். பின்னர் அவருக்கு தங்கள் சாதியைச் சேர்ந்த வேறு ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க சுஷ்மாவின் பெற்றோர் முடிவு செய்தனர்.
ஆனால் இதற்கு சுஷ்மா மறுப்பு தெரிவித்தார். இதனால் மீண்டும் சுஷ்மாவுக்கும், அவருடைய பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுஷ்மாவின் பெற்றோர், சுஷ்மாவை ஆணவக்கொலை செய்திட முடிவு செய்தனர். அதற்காக அவரை அடித்து, உதைத்து வலுக்கட்டாயப்படுத்தி விஷத்தை குடிக்க வைத்தனர்.
போலீஸ் தனிப்படை
விஷத்தை குடித்த சுஷ்மா பரிதாபமாக துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அவரது உடலை அவருடைய பெற்றோரும், குடும்பத்தினரும் சேர்ந்து தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து எரித்துவிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து அறிந்த காதலன் மனமுடைந்தார். பின்னர் இப்பிரச்சினை குறித்து மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக இதுபற்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி எச்.டி.கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ருத்ரமுனி தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
வலைவீச்சு
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சுஷ்மாவை அவருடைய தந்தை குமார் மற்றும் குடும்பத்தார் சேர்ந்து ஆணவக்கொலை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் நேற்று மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story