நத்தம் பகுதிகளில் பூத்துக்குலுங்கும் மாமரங்கள்


நத்தம் பகுதிகளில் பூத்துக்குலுங்கும் மாமரங்கள்
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் பகுதிகளில் மாமரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன.

நத்தம்,

நத்தம் பகுதிகளில் உள்ள வத்திபட்டி, பரளி, தேத்தாம்பட்டி, லிங்கவாடி, மலையூர், உலுப்பகுடி, காசம்பட்டி, செங்குளம், குட்டுபட்டி, சிறுகுடி, செந்துறை, சமுத்திராபட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளன. சேலத்துக்கு அடுத்தப்படியாக இந்த நத்தம் பகுதிகளில் விளையும் மாம்பழம் பிரசித்தி பெற்றதாகும்.

இதனால் இந்த பகுதிகளில் விளையும் மாம்பழத்தை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங் களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக கமிஷன் கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் பெரும்பாலான பகுதிகளில் மாமரங்கள் காய்ந்தன.

மாமரங்களை இருப்பினும் ஒரு சில பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில் கிடைக் கும் தண்ணீரின் மூலம் காப்பாற்றினர். தற்போது மாமரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. ஆனால் பருவமழை முறையாக பெய்யாததால் 50 சதவீத மரங்களில் மட்டுமே பூக்கள் பூத்துள்ளன. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முக்கனிகளில் முதல் கனி என்று பெயர் பெற்றது மாம்பழம். தற்போது மாமரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. ஆனால் பருவமழை முறையாக பெய்யாததால் பூக்கள் பிடிப்பதில் பின்னடைவை கண்டு உள்ளது. மாமரங்களை பராமரிக்க அடிப்படை செலவுகள் அதிகரித்துள்ளது.

வறட்சியின் காரணத்தால் ஏராளமான மரங்கள் பட்டு போய்விட்டன. இதற்கு தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து மானியத்திலோ அல்லது இலவசமாகவோ மாமரகன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றனர்.

Next Story