புனித தீவுக்குத் தடை


புனித தீவுக்குத் தடை
x
தினத்தந்தி 2 March 2018 11:52 AM IST (Updated: 2 March 2018 11:52 AM IST)
t-max-icont-min-icon

ஜப்பானில் உள்ள மிகச் சிறிய தீவு ஓகினோஷிமா.

ஜப்பானில் உள்ள மிகச் சிறிய தீவு ஓகினோஷிமா. இது ஒரு புனிதத் தீவாகக் கருதப்படுகிறது. இங்கே பெண்களுக்கு இதுவரை அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதுவும் சரியாக 200 பக்தர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அவர்களும் பலவிதமான சடங்கு சம்பிரதாயங்களுக்குப் பிறகே கோவிலுக்குள் செல்ல முடியுமாம். தற்போது யுனெஸ்கோ அமைப்பு, இந்தத் தீவை பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது. கூடவே பக்தர்களின் வருகைக்கு தடையும் விதித்திருக்கிறது. மனிதர்களின் வருகையால் தீவின் சூழல் பாதிக்கப்படு வதுடன், இயற்கை வளமும் பாதிக்கப்படுவதால் இந்த ஆண்டு முதல், தீவுக்கு பக்தர்கள் செல்வதைத் தடை செய்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு துறவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே முன் அனுமதி பெற்று இந்தத் தீவுக்குள் செல்ல முடியும்.

Next Story