அலுவலகம் செல்ல 600 கிலோமீட்டர்


அலுவலகம் செல்ல 600 கிலோமீட்டர்
x
தினத்தந்தி 2 March 2018 12:05 PM IST (Updated: 2 March 2018 12:05 PM IST)
t-max-icont-min-icon

வீடு கன்னியாகுமரியிலும், அலுவலகம் சென்னையிலும் இருந்தால் நாம் என்ன செய்வோம்?

வீடு கன்னியாகுமரியிலும், அலுவலகம் சென்னையிலும் இருந்தால் நாம் என்ன செய்வோம்? சென்னையில் தங்கியிருந்து வேலை பார்ப்போம். இல்லையேல் கன்னியாகுமரியிலேயே வேலை தேடுவோம்.

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த கர்ட் வோன் படின்ஸ்கி என்பவர், வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையிலான (650 கிலோமீட்டர்) தூரத்தை எளிதாக சமாளித்து, தினமும் வேலைக்குச் சென்றுவருகிறார். அவர் ஒருநாள் அலுவலகம் சென்று வீடு திரும்ப 1,300 கிலோமீட்டர்கள் விமானத்தில் பயணிக்கிறார்.

“நான் வேலை பார்க்கும் நிறுவனம் முதலில் லாஸ் ஏஞ்சல்ஸில், என்னுடைய வீட்டிற்கு அருகில் தான் இருந்தது. ஆனால் திடீரென்று நிறுவனத்தின் வளர்ச்சி கருதி அலுவலகத்தை சான் பிரான்சிஸ்கோவிற்கு மாற்றிவிட்டார்கள். நான் உயர் பொறுப்பில் இருப்பதால், அந்த வேலையைத் தவறவிட விரும்பவில்லை. அதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தபடி, சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் அலுவலகத்திற்குச் சென்று வர வழி தேடினேன். அப்போதுதான், இவ்விரு நகரங்களுக்கு இடையே இருக்கும் விமான சேவை பற்றி தெரிந்தது. அதில் மாதாந்திர பாஸ் வசதியும் இருந்தது. 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும், மாதம் முழுவதும் காலையிலும், மாலையிலும் அந்த விமானத்தில் பயணம் செய்யலாம். லாஸ் ஏஞ்சல்ஸிற்கும், சான் பிரான்சிஸ்கோவிற்கும் இடைபட்ட தூரத்தை (568 கிலோமீட்டர்) 90 நிமிடங்களில் கடந்துவிடுவார்கள். அதனால் என்னுடைய பயணம் சுலபமாகிறது.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு 15 நிமிட கார் பயணம், விமானத்தில் 90 நிமிட பயணம், அங்கிருந்து அலுவலகத்திற்கு 30 நிமிட பயணம் என 2.30 மணி நேரத்திற்குள்ளாகவே அலுவலகம் சென்றுவிடுவேன். போக்குவரத்து நெரிசலான நாட்களில் 3 மணி நேரமாகி விடும். வேலைகளை முடித்துக் கொண்டு வந்த வழியிலேயே வீடு திரும்ப வேண்டியதுதான். மாலை 5 மணிக்கு கிளம்பினால் இரவு 7.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்து விடுவேன்” என்கிறார்.

Next Story