காதலிக்கும்போது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர்


காதலிக்கும்போது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர்
x
தினத்தந்தி 3 March 2018 2:45 AM IST (Updated: 2 March 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

காதலிக்கும்போது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மங்களூரு,

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் செட்டி(வயது 26). இவருக்கும், கங்குலி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். மேலும் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்தனர்.

அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து நெருக்கமாக இருப்பதுபோல் செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது காதலியிடம் திருமண ஆசைவார்த்தைகள் கூறி சுரேந்தர் செட்டி உல்லாசம் அனுபவித்தார். ஒருகட்டத்தில் அந்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தி உள்ளார். ஆனால் திருமணத்திற்கு மறுத்த சுரேந்தர் செட்டி, தொடர்ந்து தன்னிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று தனது காதலியான அந்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதுபோன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி சுரேந்தர் செட்டி மிரட்டி உள்ளார். மேலும் தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அவற்றை முகநூல்(பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தொடர்ந்து சுரேந்தர் செட்டியின் ஆசைக்கு இணங்கி உள்ளார். பின்னர் தன்னை விட்டுவிடும்படி அந்த பெண், தனது காதலனான சுரேந்தர் செட்டியிடம் கதறி அழுதுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த சுரேந்தர் செட்டி தொடர்ந்து அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் இதுபற்றி கங்குலி போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேந்தர் செட்டியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story