மேடவாக்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


மேடவாக்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 3 March 2018 3:15 AM IST (Updated: 2 March 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் பெரும்பாக்கம் மெயின் ரோட்டின் ஓரம் உள்ள கடைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து இரும்பு மேற்கூரைகள், பெயர் பலகைகள், அலங்கார வளைவுகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றினார்கள். ஆனால் இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு உரிய காலஅவகாசம் கொடுத்து இருந்தால் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றி இருப்போம் என்று அவர்கள் கூறினர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளால் அந்த பகுதியில் சிறிதுநேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story