கத்திப்பாரா மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் கார் மோதி டிரைவர் பலி


கத்திப்பாரா மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் கார் மோதி டிரைவர் பலி
x
தினத்தந்தி 3 March 2018 3:00 AM IST (Updated: 2 March 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் சையத் இம்தியாஸ்

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் சையத் இம்தியாஸ் (வயது 40). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை திருவான்மியூர் பகுதியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை அழைத்துக்கொண்டு காரில் அய்யப்பன்தாங்கலுக்கு சென்றார்.

கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் பாதையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், வடபழனி செல்லும் பாதையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் டிரைவர் சையத் இம்தியாஸ் படுகாயம் அடைந்தார். காரில் வந்த பெண் ஊழியர் மற்றும் பாதுகாவலர் இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சையத் இம்தியாசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சையத் இம்தியாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story