நந்திவரம் பெரிய ஏரியின் கீழ் குடியிருப்புகள் எதிரே தானியங்கி ஷட்டர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நந்திவரம் பெரிய ஏரியின் கீழ் குடியிருப்புகள் எதிரே தானியங்கி ஷட்டர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 2015-ம் ஆண்டு பெய்த அடை மழையில் நிரம்பி கலங்கல் பகுதி வழியாக உபரி நீர் வெளியேறியது. மேலும் ஏரிக்கரை ஒரு பகுதி உடைந்து தண்ணீர் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதி குடியிருப்புகள் புகுந்தது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரியின் கலங்கல் அருகே குடியிருப்புகள் எதிரே உள்ள ஏரிக்கரையின் ஒரு பகுதியை உடைத்து நீர் வெளியேறும் வகையில் தானியங்கி ஷட்டர் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை நேற்று காலை தொடங்குவதற்காக பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.
இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் ஏரிக்கரையை உடைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தினார்கள்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அந்த பகுதி மக்கள் இன்ஸ்பெக்டரிடம் கூறியதாவது:-
தானியங்கி ஷட்டர் அமைக்கப்படும் பகுதியின் எதிர் பகுதியில் உள்ள மல்லீஸ்வரர் கோவில் தெருவில் 23 குடும்பத்தினர் வசித்து வருறோம். நாங்கள் யாரும் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டவில்லை, தற்போது நந்திவரம்-கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தில் நாங்கள் வசித்து வந்தோம். கடந்த 1997-ம் ஆண்டு பஸ் நிலையம் கட்டுவதற்காக எங்களுை-டைய வீடுகளை அரசு அகற்றியது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு அப்போது செங்கல்பட்டு தாசில்தாராக இருந்த ஜெகநாதன் மாற்று இடமாக நந்திவரம் ஏரிக்கரையின் அருகே இடம் வழங்கினார். அதன் பின்னர் நாங்கள் வீடு கட்டி இந்த இடத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் பகுதி நேராக ஏரிக்கரையை உடைத்து ஷட்டர் அமைக்க உள்ளனர். அதனை குடியிருப்புகள் இல்லாத பகுதியில் ஏரிக்கரையை உடைத்து அந்த இடத்தில் ஷட்டர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு இன்ஸ்பெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கும் வரை ஏரிக்கரையை உடைக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறிய தாவது:-
நந்திவரம் கலங்கல் பகுதி அருகே அப்போது இருந்த வருவாய் துறை அதிகாரிகள் 23 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கி உள்ளனர்.
ஆனால் இந்த இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் கலங்கல் அருகே ஏரிக்கரையை உடைத்து பல லட்ச ரூபாய் செலவில் ஷட்டர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரையில் பணிகள் தொடங்கும், இதற்காக கடந்த மாதம் கலங்கல் பகுதி அருகில் குடியிருக்கும் 23 வீடுகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கி உள்ளோம், குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடுகளை அகற்றவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள்கூறினர்.

Related Tags :
Next Story