சட்டக்கல்லூரி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: வாயில் கருப்புத்துணி கட்டி மாணவர்கள் போராட்டம்


சட்டக்கல்லூரி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: வாயில் கருப்புத்துணி கட்டி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2018 4:15 AM IST (Updated: 2 March 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்புத்துணி கட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து 5-வது நாளாக நேற்று மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள் பலர் தங்களது முகத்தின் ஒரு பகுதியில் கருப்பு மையை பூசிக்கொண்டு வாயில் கருப்புத்துணி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதேபோன்று, சென்னை சட்டக்கல்லூரி போன்று படம் வரைந்து அதில் தங்களது கைரேகைகளை பதிவு செய்தனர்.

சட்டக்கல்லூரி வேறு இடத்துக்கு மாற்றப்படாது என்று தமிழக அரசு உறுதிமொழி அளிக்கும்வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

Next Story