கட்டுமான பணியின் போது தோண்டப்படும் மணலை அனுமதி இல்லாமல் அகற்ற கூடாது, சென்னை கலெக்டர் உத்தரவு


கட்டுமான பணியின் போது தோண்டப்படும் மணலை அனுமதி இல்லாமல் அகற்ற கூடாது, சென்னை கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 3 March 2018 3:15 AM IST (Updated: 2 March 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணியின் போது தோண்டப்படும் மணலை அனுமதி இல்லாமல் அகற்ற கூடாது என சென்னை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை கலெக்டர் வெ.அன்புச்செல்வன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமான பணி(வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள்) மேற்கொள்வோர் அஸ்திவாரம் அமைக்கும் பொருட்டு தோண்டும் போது, கிடைக்கப்பெறும் உபரி மண்ணை சம்பந்தப்பட்ட எல்லையை விட்டு அகற்றும்போது, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதியை பின்பற்ற வேண்டும். அதன்படி கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே அகற்ற வேண்டும்.

உரிய அனுமதி இல்லாமல் உபரி மண்ணை அப்புறப்படுத்துவது கனிமங்கள் மற்றும் சுரங்கம் மேம்படுத்துதல், முறைபடுத்துதல் சட்டத்தின் படியும், தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதியின் படியும் குற்றம் ஆகும். இதனை மீறுவோர் மீது குற்றவியல் மற்றும் அபராத நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சென்னை மாவட்ட எல்லைக்குள் நடைபெறும் கட்டிடப் பணியின் போது உபரி மண்ணை கலெக்டரின் அனுமதி இல்லாமல் அகற்ற கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story