பொள்ளாச்சி சி.டி.சி.மேட்டில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக கட்டிடம் கட்டும் இடத்தில் நீதிபதி ஆய்வு


பொள்ளாச்சி சி.டி.சி.மேட்டில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக கட்டிடம் கட்டும் இடத்தில் நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக கட்டிடம் கட்டும் இடத்தை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் குற்றவியல் நீதிமன்றங்கள் ஜே.எம்.1, ஜே.எம்.2, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சப்-கோர்ட்டு ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 3.30 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு ரூ.8 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

கோர்ட்டு கட்டிடம் கட்டும் இடம் நகராட்சிக்கு சொந்தமானது. அந்த இடத்தை நகராட்சி வருவாய் துறையிடம் ஒப்படைக்க, நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.3½ கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. வருவாய் துறை அந்த இடத்தை பெற்றுக் கொண்டு சட்டதுறையிடம் ஒப்படைத்து உள்ளது.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் தனியாருக்கு சொந்தமான பணிமனை உள்ளது. இவர்கள் தங்களது அந்த பகுதியில் வழித்தடம் உள்ளது. எனவே தடத்திற்கு இடம் ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொள்ளாச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனால் நீதித்துறை அந்த இடத்தில் பணிகளை தொடங்க ஆட்சேபனை தெரிவித்து உள்ளது. இதனால் கட்டிட பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வக்கீல்கள் சங்க தலைவர் துரை, துணை தலைவர் மருதராஜ், செயலாளர் கணேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து வக்கீல்கள் சங்க தலைவர் துரை கூறிய தாவது:-

கோர்ட்டு வளாகம் கட்டப்பட உள்ள இடத்தில் வழித்தட பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த இடத்தில் பணிகளை மேற்கொள்ள நீதித்துறை ஆட்சேபனை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்டும் பணியை நீதிபதி கிறிஸ்டோபர் ஆய்வு செய்த போது, பணிமனைக்கு பின்புறம் வழித்தடத்திற்கு 23 அடி இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். இதனால் கோர்ட்டு கட்டிடம் கட்டுவதற்கு, தற்போது ஒதுக்கப்பட்டு உள்ள இடத்தின் அளவு குறைந்ததாலும் பரவாயில்லை என்றார். அடுத்த வாரத்திற்குள் அந்த இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story