சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்,
வேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமம் மேலக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கல்பனா(வயது 19). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து தினசரி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று விடுதியில் தனது அறையில் இருந்த, கல்பனா விஷத்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை சக மாணவிகள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கல்பனா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்பனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கல்பனா உடல் நலம் சரியில்லாமல் இருந்த தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story