தவறான சிகிச்சையால் பெண் சாவு
ஓட்டப்பிடாரம் அருகே தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியை சேர்ந்தவர் சங்கர், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த மாதம் ராமலட்சுமியின் கையில் திடீரென வலி ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த மாதம் 3-ந் தேதி எப்போதும் வென்றான் அருகே கண்ணக்கட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்து எப்போதும்வென்றானில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஒருவர் (இவர் அங்குள்ள பஞ்சாயத்து சுகாதார நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்) நடத்தி வரும் கிளினிக்கில் சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது, 70 வயதான அந்த சுகாதார ஆய்வாளர், ராமலட்சுமிக்கு வலிக்காக 2 ஊசிகளை போட்டு சிகிச்சை அளித்தார். பின்னர் அங்கிருந்து கவர்னகிரியில் உள்ள வீட்டுக்கு வந்த அவருக்கு ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து வலி அதிகமானதால், 5-ந் தேதி ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், வீக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
ஆனாலும், அவருக்கு கையில் கட்டி அகற்றப்பட்ட இடத்தில் வலி இருந்து வந்தது. இதனால், கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால், கடந்த மாதம் 28-ந் தேதி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் சங்கர், தனது மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், வீக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மனைவி இறந்து உள்ளார். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எப்போதும்வென்றான் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், இது தொடர்பாக அவருக்கு ஊசி போட்ட ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கிளினிக் நடத்தி வந்தது எப்படி? அவர் போட்ட ஊசிதான் ராமலட்சுமி உயிரிழப்புக்கு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story