செட்டிபாளையம், அனுப்பர்பாளையம் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா


செட்டிபாளையம், அனுப்பர்பாளையம் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

செட்டிபாளையம், அனுப்பர்பாளையம், திருப்பூரில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அனுப்பர்பாளையம், 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாண்டியன்நகர், அண்ணா நகர், போயம்பாளையம், அங்கேரிபாளையம், செட்டிபாளையம், கங்காநகர், அண்ணா நெசவாளர் காலனி உள்பட பல்வேறு இடங்களில் தி.மு.க. கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். 3-வது வட்ட செயலாளர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார், மாநகர தி.மு.க. நிர்வாகி காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அண்ணா நெசவாளர் காலனி உள்பட அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் தி.மு.க. நிர்வாகிகள் வழங்கினார்கள்.

இதுபோல் திருப்பூர்-அவினாசி ரோடு பெரியார் காலனி, அனுப்பர்பாளையம் பகுதிகளிலும் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜான்வல்தாரிஸ், 6-வது வட்ட கழக பொறுப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

விழாவையொட்டி பெரியார் காலனி, அனுப்பர்பாளையம் புதூர், கவிதாலட்சுமி நகர் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் வடுகநாதன், கவுரி, ராஜேஸ்வரி, துரை, செந்தில்கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் கோபிநாத் தலைமை தாங்கி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. வட்ட செயலாளர் பர்னிச்சர் செந்தில்குமார், மாநகர வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குமார், மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், அண்ணா காலனி பகுதி துணை அமைப்பாளர்கள் பாலகணேஷ், ராஜேஷ் மற்றும் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் சசி, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story