நபார்டு வங்கி தயாரித்த வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கை கலெக்டர் வெளியிட்டார்
நபார்டு வங்கி தயாரித்த 2018-19-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர வங்கியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நபார்டு வங்கி தயாரித்த 2018-19-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் கந்தசாமி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த திட்டம் ரிசர்வ் வங்கியின் முன்னோடி கடன் வழிமுறைகளையும், அரசு திட்டங்களையும், மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, உருவாக்கப்படுகின்ற உள்கட்டமைப்புகள் மற்றும் வங்கிகள், அரசு துறைகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வங்கிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டம், மாவட்டத்தின் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த துணைத் தொழில்கள் மற்றும் வேளாண்மை சாரா பிரிவுகளை வளப்படுத்தும்.
இந்த திட்ட அறிக்கையின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி கிளைகளின் மூலம் வேளாண் பயிர்கடன் ரூ.2 ஆயிரத்து 628 கோடிகளாகவும், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணைத் தொழில் களுக்கான கடன் ரூ.1,085 கோடிகளாகவும், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.231.24 கோடி என மொத்தம் வளம் சார்ந்த கடன் வழங்க இலக்கு 2018-19-ம் ஆண்டிற்கு ரூ.5,065 கோடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story